ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

அகநானூறு - 355. பாலை

ADVERTISEMENTS

மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்;
ADVERTISEMENTS

துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்றுஆயின், ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
ADVERTISEMENTS

புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
'யாமே எமியம் ஆக, நீயே
பொன் நயந்து அருள் இலையாகி,
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.



பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்