ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

அகநானூறு - 223. பாலை

ADVERTISEMENTS

மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? 'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி,
ஆழல் வாழி, தோழி! கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்,
ADVERTISEMENTS

காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை,
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்
ADVERTISEMENTS

அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட,
நன் முகை அதிரல் போதொடு, குவளைத்
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின்



பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி
வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ